தமிழ் சினிமாவில் நடிகர், பாடலாசிரியர் என பன்முகத் திறமைகளுடன் வலம் வந்து கொண்டிருக்கிறார் சினேகன். பல சூப்பர் ஹிட் பாடலுக்கு சொந்தக்காரரான இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சி மூலமாக மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை சம்பாதித்த இவர் நடிகை கன்னிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் ஒன்று சேர்ந்து சமூக வலைதளங்களில் விதவிதமான போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தபடி இருக்கின்றனர்.
இந்த நிலையில் தற்போது கவிஞர் சினேகன் சின்னத்திரையில் சீரியல் நாயகனாக நடிக்கப் போவதாக தெரியவந்துள்ளது. மேலும் அவருக்கு ஜோடியாக செய்தி வாசிப்பாளராக இருந்து சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ள அனிதா சம்பத் நடிக்க உள்ளார் எனவும் தெரிய வந்துள்ளது.
அதுமட்டுமின்றி இந்த சீரியலில் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். பவித்ரா என்ற பெயரில் உருவாகும் இந்த சீரியல் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.