Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

2 டோஸ் தடுப்பூசி போட்டும் கொரோனா பிடியில் சிக்கிய நடிகை ஷெரின்

Bigg Boss Tamil 3 fame Sherin Shringar tests positive for COVID-19

செல்வராகவன் இயக்கத்தில் 2002ம் ஆண்டு வெளியான ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஷெரின். இவர் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் நடித்துள்ளார். கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்துக் கொண்டு மிகவும் பிரபலமானார்.

இந்நிலையில், நடிகை ஷெரினுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்துகொள்ளும்படி அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தற்போது லேசான பாதிப்பு மட்டுமே இருப்பதாகவும், விரைவில் நலம் பெறுவேன் எனவும் ஷெரின் கூறியுள்ளார்.

தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நடிகை ஷெரின் ஏற்கனவே இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.