Tamilstar
News Tamil News

பிக் பாஸ் 4 Official அறிவிப்பு.. தொகுப்பாளர் யார் தெரியுமா? முழு விவரம் உள்ளே!

பிரபல முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின் மாபெரும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இதில் ஏற்கனவே 3 சீசன் வெற்றிகரமாக முடிந்ததை நாம் அறிவோம்.

ஆனால் தற்போது கொரோனாவால் பிக் பாஸ் 4 துவங்குமா என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் பிக் பாஸ் 4 கண்டிப்பாக துவங்கும், ஆனால் இம்முறை கொஞ்சம் தாமதமாக துவங்கும் என தகவல்கள் கிடைத்துள்ளது.

மேலும் இந்த பிக் பாஸ் 4ஆம் சீசனுக்கும் உலகநாயகன் கமல் ஹாசன் தான் தொகுப்பாளர் என்றும் தெரிவிக்கின்றனர்.

இதனை தொடர்ந்து இம்முறை கொரோனாவால் பல பாதுகாப்பு விதிமுறைகள் இருக்கும், மற்றும் போட்டியாளர்கள் அனைவருக்கும் கொரோனா test செய்த பிறகு தான் உள்ளே அனுமதிக்கப்படும் என்றும் கூறுகின்றனர்.

மேலும் கூடிய விரைவில் பிக் பாஸ் 4 குறித்து விஜய் டிவி அதிகாரப்பூர்வ அறிவிப்பை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.