Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது இவர்தான்- வெளிவந்த தகவல், ரசிகர்கள் ஷாக்

bigg boss tamil 5 elimination this week

விஜய் தொலைக்காட்சியின் பிரம்மாண்ட ஷோவான பிக்பாஸ் 5வது சீசன் படு வெற்றிகரமாக ஓடுகிறது.

50வது நாளுக்கு பிறகே போட்டியில் நல்ல விறுவிறுப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்து தொடர்ந்து நிறைய டாஸ்க் பிக்பாஸ் கொடுக்க அதனாலேயே போட்டியாளர்களுக்குள் நிறைய சண்டைகள் இருந்து வருகின்றன.

அதோடு புதியதாக ஒரு காதல் ஜோடியும் உருவாகியுள்ளனர், அவர்களின் உணர்வுகள் நிஜமா என்பது எல்லாம் சரியாக புரியவில்லை.

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து யார் வெளியேறுவார் என்ற பெரிய கேள்வி ரசிகர்களிடம் உள்ளது.

நமக்கு கிடைத்த தகவல்படி பிக்பாஸ் 5வது சீசனில் இருந்து அபிநய் வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது. இவர் பல வாரங்களாக எலிமினேஷனுக்கு நாமினேட் செய்யப்பட்ட நிலையில் இந்த வாரம் வெளியேறிவிட்டார் என்கின்றனர்.

ஆனாலும் நாம் இவர்தான் வெளியேறினாரா என்பதை நிகழ்ச்சியில் பார்ப்போம்.