Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தவுடன் பாவ்னிக்கு வந்த சோதனை

Bigg Boss Tamil 5 fame Pavani Reddy tests positive for COVID

தெலுங்கு சினிமாவில் உறுதுணை கதாபாத்திரங்களிலும் சீரியவிலும் நடித்து வந்த நடிகை பாவ்னி தமிழில் ‘ரெட்டை வால் குருவி’ சீரியல் மூலம் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளவர், ‘பிக்பாஸ் சீசன் 5’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

கடைசிநாட்கள் வரை சிறப்பாக விளையாடி மூன்றாவது இடத்தினைப் பிடித்தார். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த இவர், தனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தனது சமூக வலைத் தள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.

அதில், ‘லேசான அறிகுறிகளுடன் எனக்கு கொரோனா பாசிட்டிவ் வந்துள்ளது என்பதை எனது நலம் விரும்பிகளுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவர்களின் ஆலோசனைப்படி வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டேன்’ என்றும் அவர் கூறியுள்ளார்.