தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் ரசிகர்கள் மத்தியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்ட நிலையில் பிக் பாஸ் வீட்டில் குறைந்த அளவிலான போட்டியாளர்கள் மட்டுமே இருந்து வருகின்றனர். மேலும் பொங்கல் கொண்டாட்டத்திற்காக பழைய போட்டியாளர்கள் அனைவரும் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்து வீடு கலகலப்பாக மாறியுள்ளது.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க இந்த வார நாமினேஷன் பட்டியலில் அமுதவாணன் தவிர்த்து மற்ற ஆறு பேரும் இடம் பெற்றிருந்தனர். வழக்கம் போல அசீம் அதிக ஓட்டுக்களுடன் முதலிடம் பிடித்துள்ள நிலையில் ஆரம்பத்தில் குறைந்த ஓட்டுக்களுடன் கடைசி இடத்தில் இருந்த ஏடிகே தற்போது ஓரளவிற்கு ஓட்டுக்களை பெற்று சேஃப் சோன் சென்றுள்ளார் என தெரிய வந்துள்ளது.
மேலும் மைனா நந்தினி மற்றும் கதிரவன் தான் குறைந்த ஓட்டுக்களுடன் கடைசி இரண்டு இடங்களை பிடித்து இருப்பதாக தெரியவந்துள்ளது. இதனால் இருவரில் ஒருவரே இந்த வாரம் வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
