தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கோலாகலமாக நடந்து முடிந்ததை தொடர்ந்து விரைவில் பிக் பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.
இந்த நிகழ்ச்சிக்கான சூட்டிங் சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில் அதற்கான புகைப்படங்கள் இணையத்தில் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் பங்கேற்ற நிலையில் இந்த நிகழ்ச்சியில் அப்சென்டாகியுள்ளார் சக போட்டியாளரான நிவாஷினி.
அவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதற்கான காரணம் என்ன என்பதை உறுதியாக தெரியவில்லை இருந்தபோதிலும் பட வாய்ப்பு காரணமாக கலந்து கொள்ளாமல் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
