Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ வீடியோ வெளியிட்ட விஜய் டிவி

Bigg Boss Tamil 6 Logo Video

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் முடிவடைந்ததை தொடர்ந்து ஆறாவது சீசன் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

கமல்ஹாசன் அவர்களே தொகுத்து வழங்க உள்ள இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்க போவது யார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமாக எழுந்துள்ளது. மேலும் இந்த சீசனில் சாதாரண சாமானிய மக்களும் போட்டியாளர்களாக பங்கேற்கலாம் என்று அறிவிப்பு வெளியாகி இருந்தது.

இப்படியான நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சி புதிய சீசனின் லோகோ குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது குறித்த வீடியோ வெளியாகி ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. விரைவில் இந்த சீசனை தொடங்குங்கள். வீ ஆர் வைட்டிங் என பலரும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.