தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை 5 சீசன் நிறைவடைந்து நிலையில் ஆறாவது சீசன் தொடங்கப்பட உள்ளது.
இதனையும் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்க உள்ளார் என்பது உறுதியாகிவிட்டது. இதற்கான ப்ரோமோ வீடியோக்களை இணையத்தில் வெளியாகி வருகின்றன. இந்த முறை மக்களில் இருந்து ஒன்று அல்லது இரண்டு போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என தெரிய வந்துள்ளது.
அது மட்டுமல்லாமல் கடந்த சீசனை காட்டிலும் இந்த முறை வெயிட்டான போட்டியாளர்களை களத்தில் இறக்க வேண்டும் என்பது விஜய் டிவி கண்ணும் கருத்துமாக இருந்து வருவதாக சொல்லப்படுகிறது. மேலும் பிக் பாஸ் அல்டிமேட் போலவே இந்த நிகழ்ச்சியை 24 மணி நேரமும் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளனர்.
மேலும் தொலைக்காட்சியில் வழக்கம்போல இரவு 9.30 மணிக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என தெரியவந்துள்ளது. இதனால் 24 மணி நேரமும் போட்டியாளர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

bigg-boss-tamil-6-telecast details