தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் ரசிகர்கள் மத்தியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபைனல் நடைபெற உள்ளது. தற்போது வரை இந்த பிக் பாஸ் வீட்டில் அசீம், விக்ரமன், மைனா நந்தினி, ஷிவின் உள்ளிட்டோர் இருக்கின்றனர்.
தொல் திருமாவளவன் எம்பி அவர்கள் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் விக்ரமனுக்கு ஓட்டளித்து வெற்றி பெற செய்யுங்கள் என சமூக வளையதளங்களில் பதிவு செய்திருந்தார். ஒரு எம்பி சாதாரண ரியாலிட்டி ஷோவுக்கு ஓட்டு கேட்டு பதிவு செய்திருப்பது சரியா தவறா என விவாதங்கள் ஒரு பக்கம் நடந்து வருகிறது.
இப்படியான நிலையில் தற்போது வரை பதிவாகியுள்ள ஓட்டுக்களின் படி அசீம் தான் அதிக அளவிலான ஓட்டுக்களை பெற்று முதல் இடத்தை பிடித்திருப்பதாக சொல்லப்படுகிறது. அவருக்கு அடுத்தபடியான இடத்தில் விக்ரமன் இருக்க மூன்றாவது இடத்தை ஷிவின் பெற்று இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மக்களின் மனதை வென்று டைட்டில் வெல்லப்போகும் அந்த ஒரு வெற்றியாளர் யார் என்பது இந்த வாரம் தெரிந்து விடும். என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
