தமிழ் சினிமாவில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழையப் போவது யாரு என தெரியவந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கோலாகலமாக தொடங்கி நடந்து வருகிறது.
இதுவரை நிகழ்ச்சியில் இருந்து சாந்தி, அசல் கோளாறு, ஷெரீனா என மூவர் வெளியேற்றப்பட்ட நிலையில் இந்த வாரம் மகேஸ்வரி வெளியேறுவதாக தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து தற்போது இந்த நிகழ்ச்சியில் வைல்ட் காட் என்று ஆக நுழையப்போவது யார் என தகவல்கள் கசிய தொடங்கியுள்ளன.
பிரபல யூட்யூப் சேனலில் தொகுப்பாளினியாக பணியாற்றி பிறகு சர்வைவர் தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட விஜே பார்வதி கலந்து கொள்ள இருப்பதாக சொல்லப்படுகிறது. இவர் சர்வைவர் நிகழ்ச்சியில் பங்கேற்ற போதே பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போக வேண்டிய ஆள் என விமர்சனங்கள் வெளிவந்தது.
இப்படியான நிலையில் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் நிச்சயம் அது டிஆர்பிஐ உயர்த்தும் என கூறி வருகின்றனர்.
