தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஆறாவது சீசன் கோலாகலமாக தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் தனலட்சுமி வெளியேற்றப்பட இருப்பதாக தகவல் வெளியானது. மேலும் நேற்றைய எபிசோடில் கமல் பேசிய பேச்சுக்களை வைத்து இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் மற்றும் ரன்னர் யாராக இருப்பார்கள் என ரசிகர்கள் கமெண்ட் அடிக்க தொடங்கியுள்ளனர்.
அதிகமானோர் இந்த நிகழ்ச்சியின் ரன்னராக ஷிவின் அல்லது அசீம் இருப்பார் என ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர். அது மட்டுமல்லாமல் டைட்டில் வின்னராக விக்ரமன் இருக்கவே அதிக வாய்ப்பு இருப்பதாக கூறுகின்றனர். அவர்தான் இந்த விளையாட்டை நிதானமாகவும் அழகாகவும் விளையாடி வருவதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.