தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை 7 சீசன்கள் ஒளிபரப்பான நிலையில் விரைவில் எட்டாவது சீசன் தொடங்க உள்ளது.
இதற்கான போட்டியாளர்கள் தேர்வு தொடங்கி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. டிடிஎப் வாசனும் அவரது காதலி ஷாலினி ஜோயாவும் ஜோடியாக பங்கேற்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதற்கான பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இவர்கள் மட்டுமின்றி இன்னும் பல சென்சேஷனல் பிரபலங்களுடன் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது.
