முதல் நாளே மாஸ்டர் பட பாட்டு செம மாஸா பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியுள்ளது. நான்காவது சீசனில் முதல் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி நான்காவது சீசன் நேற்று கோலாகலமாக தொடங்கிய நிலையில் இன்று முதல் நாள் எபிசோடு ஒளிபரப்பாக உள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்த ப்ரோமோ வீடியோ ஒவ்வொரு நாளும் மூன்று வீடியோக்கள் வெளியாவது வழக்கம். அந்த வகையில் இன்றைக்கான முதல் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.
போஸ்டர் படத்தில் இடம்பெறும் வாத்தி கம்மிங் பாடல் ஒலிக்க போட்டியாளர்கள் செம குத்தாட்டம் போட்டு உள்ளனர்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. முதல் நாளே தளபதி பாட்டோடு தொடங்கி இருப்பதால் விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.
#Day1 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #பிக்பாஸ் #VijayTelevision pic.twitter.com/CstgN3uWn8
— Vijay Television (@vijaytelevision) October 5, 2020