Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கிசுகிசு பேசுறது ரொம்ப கஷ்டம் போல… கமல்

Bigg Boss Tamil Season 5 New promo

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை தமிழில் நான்கு சீசன்கள் முடிந்துள்ளன. 5-வது சீசன் வருகிற அக்டோபர் மாதம் தொடங்க உள்ளது. தற்போது இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க உள்ளார்.

‘பிக்பாஸ் 5’ நிகழ்ச்சிக்கான புரமோ வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது. தற்போது புதிய புரமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், ‘இந்த வீட்டில் கிசுகிசு பேசுறது ரொம்ப கஷ்டம் போல…’ என்று பேசும் வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.