தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் வெகு விரைவில் தொடங்க உள்ளது.
இந்த நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. இதில் உலக நாயகன் கமல்ஹாசன் கடலுக்கு நடுவே ஒரு காருடன் நின்று கொண்டு வழக்கம் போல ஐம் வாட்சிங் என சைகை காட்டுகிறார்.
இதை பார்க்கும் போது ஜீ தமிழின் சர்வைவர் நிகழ்ச்சியின் காப்பியா இருக்குமோ என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தனி தீவில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.
அதே போல் இந்த முறை பிக் பாஸ் போட்டியாளர்கள் தனி தீவில் தங்க வைக்கப்பட உள்ளார்களா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.