Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ரவீந்தர் மற்றும் தர்ஷிகா இடையே உருவான பிரச்சனை, வெளியான முதல் ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.

தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் தர்ஷிகா என்ட்ரி கொடுக்க ரவீந்தர் தர்ஷிகாவிடம் பேச தர்ஷிகா நான் அவருடைய பெயரை டேமேஜ் பண்ணலனா என்று சொல்ல, எதுக்குமா விஷால எல்லாரும் அடிக்கிறாங்க நீ வெளில ஒன்னு பண்ண அதனாலதான் அடிக்கிறாங்க என்று ரவீந்தர் சொல்லுகிறார். உடனே தர்ஷிகா கோபப்பட்டு எனக்கு தெரியும் என் கூட இருக்குறவங்களுக்கு தெரியும் நான் என்ன பண்ணனும் நீங்க என்னோட லைஃப்ல தலையிடாதீங்க என்று சொல்லுகிறார். இது எனக்கும் அவனுக்கும் இருக்கிற பிரச்சனை என்று சொல்ல ரவிந்தர் உன் டிராமாவை என்கிட்ட போடாத என்று சொல்லுகிறார். உடனே தர்ஷிகா உங்க டிராமாவ விடவா என்று சொல்லி கோபப்பட்டு செல்கிறார்.

இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.