தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் இந்த நிகழ்ச்சியின் ஏழாம் சீசன் மிக கோலாகலமாக தொடங்கப்பட உள்ளது.
இதுவரை ஆறு சீசன் முடிவடைந்துள்ள நிலையில் இதில் வெற்றி பெற்ற ஆறு போட்டியாளர்களின் இன்றைய நிலைமை குறித்து பார்க்கலாம் வாங்க.
1. ஆரவ் :
பிக் பாஸ் ஆரவ் நடிப்பில் ஒரு சில படங்கள் மட்டுமே வெளியான நிலையில் தற்போது பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகிறார்.
2. ரித்திகா :
பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகும் படங்களில் மட்டுமே தலைகாட்டி வரும் ரித்திகாவும் பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகிறார்.
3. முகேன் ராவ் :
வேலன் என இதுவரை ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடித்துள்ள இவரும் வாய்ப்பு இல்லாமல் தான் இருந்து வருகிறார்.
4. ஆரி அர்ஜூன் :
பிக் பாஸ் டைட்டில் வென்ற பிறகு நிறைய படங்களில் நடிப்பதாக அறிவிப்புகள் வெளியானது ஆனால் இதுவரை ஒரு படம் கூட ரிலீஸ் ஆகாமல் இருந்து வருகிறது.
5. ராஜு ஜெயமோகன் :
விஜய் டிவி சீரியல் மூலம் பிஸியாக நடித்து வந்த இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு டைட்டிலை வென்று இருக்கும் இடம் தெரியாமல் இருந்து வருகிறார்.
6. அசீம் :
பிக் பாஸ் சீசன் 6-ன் டைட்டில் வின்னர் ஆன இவரின் வெற்றி பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இவரும் டைட்டில் வெற்றி பெற்ற பிறகு வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் தான் இருந்து வருகிறார்.
இப்படி இதுவரை ஆறு சீசன் வெற்றியாளர்களும் பெரிய அளவில் ஜொலிக்காமல் இருந்து வரும் நிலையில் ஏழாவது சீசன் வெற்றியாளர் இந்த நிலையை மாற்றுவாரா என பொறுத்திருந்து பார்ப்போம்.