சிறப்பு விருந்தினர்களுடன் தீபாவளி கொண்டாடியுள்ளனர் பிக் பாஸ் போட்டியாளர்கள்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் இந்த நிகழ்ச்சி ஏழு சீசன்கள் முடிந்த நிலையில் எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.இன்று உலகம் எங்கும் தீபாவளி பெருநாள் கொண்டாடி வருகின்றனர்.
இன்று வெளியான பிக் பாஸ் முதல் ப்ரோமோவில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் தீபாவளியை சிறப்பு விருந்தினர்களோடு, போட்டியாளர்கள் கொண்டாடி வருகின்றனர்.
கவின் சிறப்பு விருந்தினராக பங்கேற்று அனைவருக்கும் தீபாவளி வாழ்த்து மற்றும் அவர்களுடன் பட்டாசு வெடித்தும், விருந்து சாப்பிட்டும் தீபாவளியை கொண்டாடுகிறார். இவரது நடிப்பில் இன்று பிளடி பெக்கர் என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram