தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கோலாகலமாக நடந்து முடிந்த நிலையில் விரைவில் ஏழாவது சீசன் தொடங்கப்பட உள்ளது. இதுவரை இல்லாத வகையில் இந்த முறை இரண்டு பிக் பாஸ் வீடுகள் இடம் பெற உள்ளன.
மேலும் தமிழுக்கு முன்பாகவே தெலுங்குவில் சீசன் 7 தொடங்கப்பட்ட நிலையில் கவர்ச்சி நடிகை சகிலா, கிரண் ரத்தோர் ஆகியோர் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் முதல் வாரத்திலேயே கிரண் ரத்தோடு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து அவர் தமிழில் பிக் பாஸ் சீசன் 7 -ல் போட்டியாளராக கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனால் கவர்ச்சிக்கு பஞ்சம் இருக்காது என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்
