தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். ஐந்து சீசன் ஒளிபரப்பாகி பெரிய வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தற்போது பிக்பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் ஹாட்ஸ்டார் இல் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் இதுவரை பங்கேற்ற சர்ச்சையான போட்டியாளர்களை தேர்வு செய்து அல்டிமேட் வீட்டிற்குள் அனுப்பியுள்ளனர்.
முதல் வார நாமினேஷன் பட்டியலில் வனிதா விஜயகுமார், சினேகன், நிரூப், அனிதா சம்பத், ஸ்ருதி, சுரேஷ் சக்ரவர்த்தி, ஜூலி, அபிநய் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
இவர்களில் அபிநய், சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் குறைந்த ஓட்டுகளுடன் இருந்து வந்த நிலையில் இந்த வாரம் சுரேஷ் சக்ரவர்த்தி பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டு விட்டதாக தகவல் கிடைத்துள்ளது.