தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் விருவிருப்பாக ஒளிபரப்பாகி முடிந்த நிலையில் தற்போது ஹாட் ஸ்டாரில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
இந்த நிகழ்ச்சியில் இருந்து இதுவரை சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் சுஜா வருணி என இருவர் வெளியேறியுள்ளனர். இந்த வார நாமினேஷனில் இடம் பெற்றுள்ளவர்களில் பாலாஜி முருகதாஸ் அதிகமான ஓட்டுகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
அவருக்கு அடுத்ததாக ஜூலி, அனிதா, தாமரைச் செல்வி ஆகியோர் பாதுகாப்பான இடத்தில் உள்ளனர். இந்த வாரமும் குறைந்த ஓட்டுகளோடு கடைசியில் இடத்தில் இதன் பெற்றுள்ளார் அபிநய். அவருக்கு அடுத்ததாக ஷாரிக் மற்றும் சினேகன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இவர்களில் ஒருவர்தான் இந்த வாரம் வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை வெளியேறிய இருவரும் பெயர்களும் எஸ் என்ற எழுத்திலேயே தொடங்கியது. இதனால் அதே சென்டிமென்ட் இந்த வாரமும் தொடர்ந்தால் சினேகன் அல்லது ஷாரிக் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற வாய்ப்புள்ளது என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
கடைசியில் என்ன நடக்கிறது யார் வெளியேறுகிறார்கள் என்பதை ஞாயிற்றுக்கிழமை வரை பொறுத்திருந்து பார்க்கலாம்.