தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் நடந்து முடிந்ததைத் தொடர்ந்து ஹாட் ஸ்டாரில் பிக் பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
இந்த நிகழ்ச்சியிலிருந்து ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் இந்த வாரம் புதிதாக கே பி ஒய் தீனா மற்றும் சாண்டி மாஸ்டர் ஆகியோர் மீண்டும் உள்ளே அனுப்பப்பட்டுள்ளனர்.
மேலும் சுரேஷ் சக்ரவர்த்தி தானாக பிக் பாஸ் வீட்டில் இருந்து உடல்நலக் குறைபாடு காரணமாக வெளியேறிவிட்டார். இதனால் இந்த வாரம் வெளியேற்றம் இருக்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
ஒருவேளை எவிக்ஷன் இருந்தால் கலக்கப்போவது யாரு சதீஷ் வெளியேறுவார் என சொல்லப்படுகிறது. அவரும் அபிராமியும் தான் குறைந்த ஓட்டுக்களில் கடைசி இடத்தில் இருந்து வருகின்றனர்.
வழக்கம்போல் பாலா அதிகமான ஓட்டுகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
