Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கோலாகலமாக தொடங்கிய பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி… போட்டியாளர்களின் முழு விவரம்

bigg boss ultimate contestant list

பிக்பாஸ் 5-வது சீசன் நிகழ்ச்சி சமீபத்தில் வெற்றிகரமாக முடிந்தது. இதில் ராஜு ஜெயமோகன் பிக்பாஸ் சீசன் 5-ன் டைட்டிலை வென்றார். இந்நிகழ்ச்சி முடியும் தினத்தில், பிக் பாஸ் அல்டிமேட் என்ற புதிய நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகவிருக்கும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்கள்.

அதன்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போட்டியாளர்களை அறிவித்து வந்தனர். இந்நிலையில் நேற்று (30.01.2022) தொடங்கப்பட்ட பிக்பாஸ் அல்டிமேட் முதல் நாள் தொடக்க நிகழ்ச்சியில் பிக்பாஸ் வீட்டில் உள்ளே 14 போட்டியாளர்கள் நுழைந்திருக்கிறார்கள். அதன் விவரம்:

முதல் சீசனில் இருந்து ஜுலி, சினேகன், சுஜாவும்,

இரண்டாம் சீசனில் இருந்து தாடி பாலாஜி மற்றும் ஷாரிக்கும்,

மூன்றாம் சீசனில் இருந்து அபிராமி மற்றும் வனிதா விஜயகுமாரும்,

நான்காம் சீசனில் இருந்து அனிதா சம்பத், பாலாஜி மற்றும் சுரேஷும்,

ஐந்தாம் சீசனில் இருந்து தாமரை செல்வி, சுருதி, அபிநய், நிரூப்

ஆகியோர் பிக்பாஸ் வீட்டின் உள்ளே நுழைந்துள்ளனர்.

bigg boss ultimate contestant list
bigg boss ultimate contestant list