Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Bigg Boss Ultimate Contestants Salary update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக முடிந்தது தொடர்ந்து தற்போது பிக்பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் ஹாட்ஸ்டார் இல் நிகழ்ச்சி ஒளிபரப்பாக தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் 5 சீசன்களில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் சர்ச்சைக்குரிய நபர்கள் மட்டும் தேர்வு செய்யப்பட்டு உள்ளே அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த போட்டியாளர்கள் ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு என்பது குறித்த தகவல் தற்போது தெரியவந்துள்ளது.

இவர்களில் சினேகன் மற்றும் வனிதா விஜயகுமார் ஆகியோருக்கு ஒரு நாளைக்கு ரூபாய் 45 – 50 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கப்படுவதாக சொல்லப்படுகிறது.

அதற்கு அடுத்ததாக ஜூலிக்கு ஒரு நாளைக்கு 30 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. இவர்களைத் தவிர்த்து பிக் பாஸ் வீட்டில் உள்ள மற்ற போட்டியாளர்கள் அனைவருக்குமே இதற்கு முன்னதாக அவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது வாங்கிய சம்பளமே வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Bigg Boss Ultimate Contestants Salary update
Bigg Boss Ultimate Contestants Salary update