தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் 5 சீசன் முடிவடைந்த நிலையில் பிக்பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் ஐந்து சீசனிலும் பங்கேற்ற சில போட்டியாளர்களை தேர்வு செய்து புதிதாக ஸ்டாரில் நேற்று முதல் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் பாதையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது புது முயற்சியாக இருக்கும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காலை 2 மணி நேரம் சினேகன் நடப்பதை மட்டுமே காட்டியுள்ளனர். மற்றவர்கள் தூங்குவது போல காட்டியுள்ளனர்.
இதனால் ரசிகர்கள் கடுப்பாகி உள்ளனர். இருபத்திநான்கு மணிநேரமும் என்பதால் இப்படியா நடப்பதை மட்டுமே காட்டுவீங்க என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.