தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் வெற்றியை தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள் மீண்டும் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சி இன்னும் ஒரே வாரத்தில் முடிவடைய உள்ள நிலையில் மொத்த ஓட்டுக்களில் 75 சதவீத வாக்குகளை பாலாஜி முருகதாஸ் அவர்களே பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இதனால் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டைட்டில் வின்னர் பாலாஜி முருகதாஸ் தான் என தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் பங்கேற்ற போது இரண்டாவது இடத்தைப் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
