தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை 5 சீசன்கள் ஒளிபரப்பாகியுள்ள நிலையில் ஆறாவது சீசனும் விஜய் டிவியில் கோலாகலமாக தொடங்கி ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 20 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர். பிக் பாஸ் நிகழ்ச்சி என்றால் அனைத்து போட்டியாளர்களையும் ஆட்டுவிக்கும் அந்த கம்பீரக் குரல் தான் அனைவருக்கும் முதலில் ஞாபகத்திற்கு வரும்.
ஐந்து சீசன்களையும் தொடர்ந்து இந்த ஆறாவது சீசனையும் இந்த நிகழ்ச்சிக்கு குரல் கொடுப்பது யார் என்பது தெரிய வந்துள்ளது. அவர் பெயர் சச்சிதானந்தம். கோலிவுட் முதல் பாலிவுட் வரை அனைத்து மொழிகளிலும் பணியாற்றியுள்ளார். இவருடைய புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.