Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

போட்டியாளரை எச்சரித்த பிக் பாஸ்.வைரலாகும் வீடியோ

bigg-boss-warning-to-adk video viral

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வருகிறது.

பிக் பாஸ் வீட்டிற்குள் எல்லாவிதமான வசதிகளும் உள்ளது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அதிலும் முக்கியமான ஒன்று ஸ்மோக்கிங் ரூம். போட்டியாளர்கள் புகைப்பிடிப்பதற்காக உருவாக்கப்பட்ட ரூம் தான் இது.

சமீப நாட்களாகவே ஏடிகே-விற்கு உடல் நல குறைபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மருத்துவர்கள் அவரை முற்றிலுமாக புகை பிடிக்கக் கூடாது என அறிவுறுத்தி உள்ளனர். ஆனாலும் எடுக்க தொடர்ந்து புகை பிடித்து வந்த காரணத்தினால் பிக் பாஸ் மீண்டும் ஸ்மோக்கிங் ரூம் சென்றால் உங்களை வீட்டை விட்டு வெளியே அனுப்புவதை தவிர வேறு வழியில்லை என ஏடிகேவை அழைத்து எச்சரித்துள்ளார்.

மருத்துவர்கள் நீங்கள் முற்றிலுமாக புகை பிடிக்கக் கூடாது என எச்சரித்துள்ளார்கள். ஏற்கனவே நீங்கள் மிகவும் சோர்வாக உள்ளீர்கள், இந்த நேரத்தில் புகைப்பிடிப்பதை தொடர்ந்தால் நிச்சயம் உங்களது உடல் நலம் கருதி உங்களை வீட்டை விட்டு வெளியே அனுப்புவதை தவிர வேறு வழியில்லை என தெரிவித்துள்ளார்.