தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசனில் போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்டு நான்காவது வாரத்தில் வீட்டை விட்டு வெளியேறியவர் யுகேந்திரன்.
மலேசியா வாசுதேவனின் மகனான இவர் பாடகராக மட்டுமல்லாமல் படங்களில் நடிகராகவும் நடித்துள்ளார். தளபதி விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு ஜாக்பாட் வாய்ப்பாக தளபதி விஜய் உடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆமாம் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் தளபதி 68 படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.
திருப்பாச்சி படத்தில் யுகேந்திரன் விஜயுடன் சேர்ந்து நடித்த நிலையில் 18 வருடத்திற்கு பிறகு தற்போது மீண்டும் அவருடன் இணைய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
