தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
தற்போது பத்து போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் நிலையில் கிராண்ட் பைனல் இன்னும் இரண்டு வாரத்தில் நடைபெற உள்ளது. அதனால் இந்த வாரம் டபுள் எலிமினேஷன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் தினேஷ், மணி, விஷ்ணு, ரவீனா, விஜய் வர்மா, நிக்சன் மற்றும் மாயா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
தற்போது வரை பதிவாகியுள்ள ஓட்டுகளின் படி மாயா மற்றும் நிக்சன் ஆகியோர்தான் கடைசி இரண்டு இடங்களில் உள்ளனர். ஆகையால் டபுள் எலிமினேஷன் நடந்தால் இவர்கள் இருவரும் வெளியேற்றப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் இதுவரை மாயாவை பெரிதாக கண்டிக்காமல் மறைமுகமாக சப்போர்ட் செய்து வரும் நிலையில் டிக்கெட் டு பினாலே டாஸ்க்கில் அவர் வெற்றி பெற்று பைனல் வரை செல்லவும் வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
