Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்து மாயா போட்ட பதிவு

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி முடிவுக்கு வந்த பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி கடந்த வாரம் முடிவுக்கு வந்தது.

இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு 105 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்து மூன்றாம் இடம் பிடித்து வெளியேறிய மாயா தன்னுடைய ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதாவது என்னை மட்டும் ரசியுங்கள் என்னை போல மற்றவர்களையும் ரசியுங்கள் ஆனால் யாரையும் வெறுக்காதீர்கள். என்னை வெறுப்பவர்களாக இருந்தால் கூட அவர்களை வெறுக்காதீர்கள். பிக் பாஸ் வீட்டில் இருந்த 105 நாட்கள் மரணப்படுக்கையில் மறக்காதது என தெரிவித்துள்ளார்.

உங்களுக்காக உழைப்பேன். சந்திக்கலாம் என பதிவு செய்துள்ளார். மேலும் தனக்கு ஆதரவு அளித்தவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.