Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மன்னிக்க முடியாது போடா.. கோபத்தில் சௌந்தர்யா, வெளியான இரண்டாவது ப்ரோமோ..!

BiggBoss 8 Tamil Day 53 Promo 2 Update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.

இந்த வாரம் நானும் பொம்மை நீயும் பொம்மை என்ற டாஸ்க் நடந்து வருகிறது. தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் பொம்மை டாஸ்க் தொடங்க ராணவ் மற்றும் ரயான் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட அது சண்டையில் முடிகிறது. ஒருவருக்கொருவர் மாறி மாறி அடிக்கப் பாய சக போட்டியாளர்கள் அவர்களை தடுத்து நிறுத்துகின்றனர்.

தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில், ராணவ் மற்றும் ஜாக்லின் இடையே முதலில் பிரச்சனை வர, பிறகு சௌந்தர்யாவிற்கும் அவருக்கும் இடையில் வாக்குவாதம் அதிகரிக்கிறது. ராணவ் வாய மூடு என்று சௌந்தர்யாவை சொல்ல, நீ யாருடா சொல்றதுக்கு முதல்ல மரியாதையா கத்துக்கோ என்று சொல்லுகிறார். ஜாக்லினிடம் சாரி என்று சொல்ல அதற்கு ஜாக்லின் உன்ன பட்டுனு அறஞ்சிட்டு நான் சாரி சொல்லவா என்று கேட்கிறார் உடனே சௌந்தர்யா சாரி பூரின்னு வந்துட்ட சாரி ஏத்துக்க முடியாது போடா என்று சொல்லுகிறார்.

இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.