தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஓவியா. மெரினா, களவாணி போன்ற படங்களில் மூலம் அறிமுகமாகி அதன் பிறகு தொடர்ந்து சில படங்களில் நடித்து பிரபலம் அடைந்த இவர் பிக் பாஸ் நிகழ்ச்சி முதல் சீசனில் கலந்து கொண்டு புகழின் உச்சத்திற்கு சென்றார்.
இதே சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட ஆரவ்வை காதலிப்பதாக பலமுறை தெரிவித்தார். நிஜ வாழ்க்கையில் ஓவியாவின் காதல் கைகூடவில்லை. இந்த நிலையில் தற்போது அனைத்து உள்ள பேட்டி ஒன்றில் தன்னுடைய திருமணம் குறித்து பேசி உள்ளார்.
அதாவது தனிமையில் இருக்கவே விரும்புகிறேன். தற்போது வரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வரவில்லை. ஆனால் நடக்க வேண்டிய நேரத்தில் திருமணம் நடக்கும். யாரையும் எதற்காகவும் எதிர்பார்ப்பதில்லை. ஒருவேளை என் வாழ்க்கையில் திருமணம் நடக்காவிட்டாலும் கவலைப்பட மாட்டேன் சந்தோஷம்தான் என தெரிவித்துள்ளார்.
தற்போது வரை தனிமை தான் எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது எனவும் பேசியுள்ளார்.