Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

எவிக்சன் டாஸ்க் கொடுத்த பிக் பாஸ். வெளியான இரண்டாவது ப்ரோமோ..!

Biggboss tamil 8 day 56 promo 2 update

இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.

தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் ரயான் மற்றும் ராணவ் ஜெஃப்ரி குறித்து கேள்வி கேட்டுள்ளார். அவர்களை எழுப்பி நம்ம ஒருத்தரோட உடம்ப நசுக்கிற மேனு உங்களுக்கு தெரியல உங்களுக்கு ராணவ் பண்ணது தப்புனா நீங்க மஞ்சரிக்கு பண்ணதுக்கு பேரு என்ன பிக் பாஸ் முடிஞ்சதுன்னு சொன்னதுக்கு அப்புறம் என்ன அடிச்சு சாவடிச்சிடுவேன் என்ன சார் இது விளையாட தானே போயிருக்கீங்க என்று கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்.

தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் விஜய் சேதுபதி சாச்சனா, ரஞ்சித், சிவக்குமார், ஆனந்தி இவர் நால்வரையும் நடுவில் உட்கார வைத்து எவிக்ஷனை பிக் பாஸ் பார்த்து பாரு என்று சொல்லுகிறார். உடனே பிக் பாஸ் ஆக்டிவிட்டி ஏரியாவில் ஒரு பிளாஸ்டிக் தொட்டிக்குள் பந்துகள் நிரப்பப்பட்டு அதில் டால் பொம்மைகள் இருக்கின்றன அதில் யாருடைய பெயர் இருக்கிறதோ அவங்க சேஃப் பேர் இல்லாத ஒரு நபர் எலிமினேஷன் செய்யப்படுவார் என்று சொல்லுகிறார் போட்டியாளர்கள் நால்வரும் பொம்மையை தேடுகின்றனர்.

இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.