இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.
பிக் பாஸ் வீட்டில் டெவில்ஸ் மற்றும் ஏஞ்சல்ஸ் ஸ்டாக் தொடங்கியுள்ளது அதில் ஏஞ்சல்களை வெறுப்பேற்றி அவர்கள் கோவத்திற்கு ஆளானாலும் இல்லை அழுதாலோ அவர்களிடம் இருக்கும் ஹாட் சிம்பலை கழட்டி கொடுத்து விட வேண்டும் என்பது ரூல்ஸ் ஆக இருக்கிறது.
அதில் யாரிடம் அதிகமான ஹார்ட் சிம்பல் இருக்கிறதோ அவர்கள் நாமினேஷன் ஃப்ரீ செய்யப்படுவார் என்று டாஸ்க் சொல்லப்படுகிறது.
தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் தர்ஷிகா மற்றும் ஜாக்லின் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. ஜாக்லின் சீ போ என்று சொல்ல அதற்கு தர்ஷிகா என்ன பார்த்து அப்படி சொல்லாத உன் இஷ்டத்துக்கும் பேசுறதுக்கு இது ஒன்னும் உங்க அப்பா வீடு கிடையாது என்று கேட்கிறார்.
உடனே சௌந்தர்யா யாரைக் கேட்டு அப்பா வீடு சொல்ற என்று சொல்லி சௌந்தர்யா மற்றும் தர்ஷிகாவிற்கு இடையே வாக்குவாதம் அதிகரிக்கிறது. ஒரு கட்டத்திற்கு மேல் சண்டையாக மாற போட்டியாளர்கள் வந்து தடுக்கின்றனர்.
இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram