விஜய் டிவியில் காமெடி நடிகராக அறிமுகமாகிய தன்னுடைய திறமையால் இன்று முன்னணி காமெடி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் ரோபோ சங்கர்.
உடல் நலக்குறைபாட்டால் பாதிக்கப்பட்டு உடல் எடை குறைந்து ஒல்லியாக காணப்படும் இவர் மீண்டும் பழைய நிலைக்கு தேறி வருகிறார்.
இந்த நிலையில் இந்திரஜா ரோபோ சங்கர் தன்னுடைய மாமாவுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட ரசிகர் ஒருவர் உங்க மாமாவை தான் கல்யாணம் பண்ணிக்க போறீங்களா என கேள்வி எழுப்பி உள்ளார்.
அதற்கு இந்திரஜா ஆமாம், இன்னும் டேட் மட்டும் குறிக்கல.. கூடிய விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். என்னுடைய ரசிகர்கள் மற்றும் நலம் விரும்புகிறது நிச்சயம் அந்த தகவலை தெரிவிப்பேன் என கூறியுள்ளார்.