Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாகும் பிகில் பட நடிகை

Bigil film actress paired with GV Prakash

தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம்வரும் ஜிவி பிரகாஷ், படங்கள் நடிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், இவர் கைவசம் ஐங்கரன், ஆயிரம் ஜென்மங்கள், அடங்காதே, ஜெயில், காதலிக்க நேரமில்லை, பேச்சிலர், 4ஜி, டிராப் சிட்டி என பத்துக்கும் மேற்பட்ட படங்கள் உள்ளன.

இந்நிலையில், இவர் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. அதன்படி சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற படங்களை இயக்கிய ராஜேஷ் இப்படத்தை இயக்க உள்ளார். இப்படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக பிகில் பட நடிகை அம்ரிதா ஐயர் நடிக்க உள்ளார்.

மேலும் ஆனந்த்ராஜ், பிக்பாஸ் பிரபலங்கள் ரேஷ்மா, டேனியல் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். ஏற்கனவே இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் ‘கடவுள் இருக்கான் குமார்’ படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.