Tamilstar
News Tamil News

மீண்டும் ரீ-ரிலீஸ் ஆகும் பிகில்! – கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்!

சீனாவில் கடந்த வருடம் தோன்றிய கொரானா வைரஸ் காரணமாக பெரும்பாலான உலக நாடுகள் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது.

ஜெர்மனி, மலேசியா, சிங்கப்பூர், ஸ்ரீலங்கா உள்ளிட்ட நாடுகள் தற்போது இதில் இருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன.

இதனால் இந்த நாடுகளில் தியேட்டர்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே ஜெர்மனி, மலேசியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் தளபதி விஜயின் பிகில் திரைப்படம் ரி-ரிலீஸாகி உள்ளது.

இந்த மூன்று நாடுகளை தொடர்ந்து ஸ்ரீலங்காவில் பிகில் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனால் அந்நாட்டில் உள்ள விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.