Tamilstar
News Tamil News

14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நடிகை பிந்து மாதவி!

நடிகை பிந்து மாதவி தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர், இவர் தமிழில் கேடி பில்லா கில்லாடி ரங்கா, கழுகு போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அதன்பின் நடிகர் கமல்ஹாசன் முன்னின்று நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களின் மனதை கவர்ந்தார் நடிகை பிந்து மாதவி.

இந்நிலையில் அவரின் ட்விட்டர் பக்கத்தில், அவர் வசித்துவரும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு நபருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த கட்டிடம் முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் நடிகை பிந்து மாதவி 14 நாட்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டள்ளார். மேலும் அரசு ஊழியர்கள் அந்த கட்டிடத்திற்கு சீல் வைக்கும் விடியோவை பகிர்ந்து, Redzone என பதிவிட்டுள்ளார்.