Tamilstar
Health

நீரிழிவு நோயாளிகளுக்கு உதவும் பிரியாணி இலை.

Biryani leaves help diabetic patients

நீரிழிவு நோயாளிகளுக்கு பிரியாணி இலை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்படும் நோய்களில் ஒன்று நீரிழிவு நோய். நீரிழிவு நோய் வந்துவிட்டால் அது நம் உடலுக்கு பல்வேறு நோய்களையும் கொண்டு வந்து விடுகிறது. நீரிழிவு நோயாளிகள் பெரும்பாலும் உணவில் கட்டுப்பாட்டுடன் இருப்பது பழக்கம். அப்படி நாம் உணவில் சுவையை அதிகரிக்கும் மசாலா பொருட்களில் ஒன்றான பிரியாணி இலை நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது என்று உங்களுக்கு தெரியுமா..!

பிரியாணி இலையை அரைத்து பொடியாக எடுத்துக்கொண்டு ஒரு மாதத்திற்கு சாப்பிட்டு வர வேண்டும்.

அப்படி சாப்பிடும் போது இது நீரிழிவு நோயை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.

பிரிஞ்சி இலையில் பொட்டாசியம் தாமிரம் கால்சியம் மெக்னீசியம் இரும்பு போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்து உள்ளது.

மூச்சுத் திணறல் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு பிரியாணி இலை கொதிக்க வைத்த நீரை ஒரு துணியால் நனைத்து மார்பில் மீது ஒத்தடம் கொடுத்தால் சிறந்தது.

இது நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுப்பது மட்டுமில்லாமல் வயிற்று பிரச்சனைகளையும் செரிமானப் பிரச்சனையிலிருந்தும் நமக்கு நிவாரணம் கிடைக்கும்.