Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அஜித்தின் வலிமை விஜய் படங்களின் 75 சதவீதம் கூட நெருங்கவில்லை.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்

Bismi About Valimai Movie Box Office

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வரும் திரைப்படம் வலிமை. வினோத் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் உலகம் முழுவதும் நல்ல வசூலை பெற்று வருவதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

இதுவரை 220 கோடியை தாண்டி விட்டதாக சொல்லப்பட்டு வரும் நிலையில் பத்திரிக்கையாளரான பிஸ்மி வலிமை படத்தின் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் குறித்து பேசியுள்ளார். அது வலிமை திரைப்படம் சென்னை, செங்கற்பட்டு, கோவை மற்றும் ஆற்காடு உள்ளிட்ட பகுதிகளில் சொற்ப லாபம் பெற்றுள்ளது.

சேலம், திருச்சி மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களில் 8 கோடி நஷ்டம் என கூறியுள்ளார். விஜய் படத்தின் வசூலில் 75 சதவீதம் கூட வலிமை திரைப்படம் தொடவில்லை என அவர் தெரிவித்துள்ளார். இந்த தகவல்களை ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து மீண்டும் அஜித் ரசிகர்களை சீண்டியுள்ளார்.

வலிமை – வசூல் – வலைப்பேச்சு பிஸ்மி:

சென்னை, செங்கல்பட்டு, கோவை, ஆற்காடு ஏரியாக்களில் சொற்ப லாபம் மட்டுமே. சேலம், திருச்சி, திருநெல்வேலி ஏரியாக்களில் எட்டு கோடி நஷ்டம்.

விஜய் வசூலை 75% கூட அஜித் தொடவில்லை.