உடல் எடையை குறைக்க கருஞ்சீரகம் உதவுகிறது. எனவே உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் கருஞ்சீரகத்தை சாப்பிடுவது நல்ல பலனை அளிக்கும். வெதுவெதுப்பான நீருடன் கருஞ்சீரகத்தை கலந்து அருந்துவது சிறப்பு.
உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை நீக்க கருஞ்சீரகம் மிகவும் உதவக்கூடியது. இதனால் இதய நோய் நம்மை நெருங்காமல் பாதுகாத்துக்கொள்ளவும், இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் கருஞ்சீரகம் உதவும்.
நீரழிவு நோயை கட்டுக்குள் வைத்திருக்க கருஞ்சீரகம் மிகவும் உதவுகிறது. எனவே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கருஞ்சீரகத்தை காலையில் வெறும் வயிற்றில் கருப்பு தேநீருடன் கலந்து அருந்துவது நல்லது.
கருஞ்சீரகத்தில் அதிக அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிரம்பியுள்ளன. இது புற்று நோய் நம்மை நெருங்காமல் பாதுகாத்துக் கொள்ள மிகவும் உதவக் கூடியதாக உள்ளது. குறிப்பாக மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய், கணையப் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்டவற்றில் இருந்து நம்மைக் காக்கிறது.
உயர் ரத்த அழுத்தத்தால் அவதிப்படும் நபர்களுக்கு கருஞ்சீரகம் ஒரு சிறந்த மருந்தாக திகழ்கிறது. கருஞ்சீரகத்தை சாப்பிடுவதனால் ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள முடியும்.
தற்போதைய காலகட்டத்தில் எல்லா இடங்களும் மாசு நிறைந்த பகுதிகளாக காணப்படுகின்றன. இதனால் பலர் ஆஸ்துமா உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது. வெதுவெதுப்பான நீரில் கருஞ்சீரக எண்ணெய்யை தேனுடன் கலந்து அருந்துவது ஆஸ்துமா நோயிலிருந்து விடுபட உதவும்.
கருஞ்சீரகத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள், உங்களின் முடி மற்றும் சருமத்தை ஆரோக்கியத்துடனும், பொலிவுடனும் வைத்துக் கொள்ள மிகவும் உதவுகிறது. மேலும் முகப்பருக்கள் நீங்கவும் கருஞ்சீரகம் உதவுகிறது. எனவே ஆரோக்கியமான மற்றும் அழகான சருமத்தையும், முடியையும் பெற கருஞ்சீரகத்தை நீங்கள் தாராளமாக பயன்படுத்தலாம்.
சிறுநீரகத்தில் கற்கள், வலி, தொற்று உள்ளிட்ட சிறுநீரகம் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கொடுக்கவும் கருஞ்சீரகம் உதவுகிறது. வெதுவெதுப்பான நீரில் அரை தேக்கரண்டி கருஞ்சீரக எண்ணெய் மற்றும் தேன் ஆகியவற்றை சேர்த்து சாப்பிடுவது நல்லது.
இடுப்பைக்காட்டி விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் காவியா அறிவுமணி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா…
நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
கருப்பு நிற உடையில் மாளவிகா மோகனன் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா, இயக்கத்திலும்,அ.அன்பு ராஜா,…
ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர்…