Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விஜய் மற்றும் அஜித் நடிப்பில் வெளியான கடைசி மூன்று ட்ரெய்லர்களை வெளியிட்டு ப்ளூ சட்டை மாறன் போட்ட பதிவு

blue-sattai-maaran-about-varisu-vs-thunivu movies trailer

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித் மற்றும் விஜய். தமிழ் சினிமாவின் இரு பெரும் முன்னணி நடிகர்களாக வலம் வரும் இவர்களது நடிப்பில் உருவான வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்கள் வரும் பொங்கலுக்கு நேருக்கு நேராக மோதிக் கொள்ள உள்ளன.

இந்த இரண்டு படங்களும் ஜனவரி 11ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் ப்ளூ சட்டை மாறன் அஜித் நடிப்பில் வெளியான மூன்று படங்களின் ட்ரெய்லர் வியூ மற்றும் விஜய் நடிப்பில் வெளியான கடைசி மூன்று படங்களின் ட்ரெய்லர் வியூ உள்ளிட்டவற்றை ஒப்பிட்டு பதிவு செய்துள்ளார்.

விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் பல ட்ரெய்லர் 70 மில்லியன் பார்வையாளர்களை பெற்றது, அதற்கு அடுத்ததாக பீஸ்ட் திரைப்படம் அறுவது மில்லியன் பார்வையாளர்களைப் பெற்ற நிலையில் வாரிசு டிரைலர் 30 மில்லியன் பார்வையாளர்களை மட்டுமே பெற்றுள்ளது.

அதேபோல் விஜய் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை ட்ரைலர் 19 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றது. அதனை தொடர்ந்து வெளியான வலிமை படத்தின் டிரைலர் 25 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்ற நிலையில் சமீபத்தில் வெளியான துணிவு படத்தின் டிரைலர் 57 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.

விஜய் நடிப்பில் வெளியான கடைசி மூன்று ட்ரெய்லர்கள் கொஞ்சம் கொஞ்சமாக பார்வையாளர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்த நிலையில் அஜித்தின் கடைசி மூன்று ட்ரைலர்களின் பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய பதிவில் தெரிவித்துள்ளார்.