Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அஜித்தை விமர்சித்து ப்ளூ சட்டை மாறன் போட்ட பதிவு.. திட்டி தீர்க்கும் அஜித் ரசிகர்கள்

blue-sattai maaran-blast-ajith-photos

திரையுலகில் வெளியாகும் படங்களை விமர்சனம் செய்து ரசிகர்கள் மத்தியில் சர்ச்சைக்குரிய நபராக வலம் வருபவர் ப்ளூ சட்டை மாறன். ‌ குறிப்பாக அஜித்தின் படங்களை சகட்டுமேனிக்கு தரக்குறைவாக விமர்சித்து வருவதை தன்னுடைய வழக்கமாக வைத்துக் கொண்டிருக்கிறார்.

முதலில் படங்களை மட்டுமே விமர்சனம் செய்து வந்த ப்ளூ சட்டை தற்போது அஜித்தின் புகைப்படங்கள் குறித்தும் விமர்சித்து வருவது ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது அஜித் வெளிநாட்டுச் சுற்றுலா சென்றுள்ள நிலையில் அங்கு ஆடம்பர கார் ஒன்றுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாக இந்த போட்டோவை பதிவு செய்துள்ள ப்ளூ சட்டை மாறன் அவார்டு பங்ஷன், ப்ரமோஷன் போன்றவற்றிற்கு வரமாட்டார். ஆனால் வருடத்திற்கு குறைந்தது 365 போட்டோக்களையாவது நாம் பார்த்து விடுவோம்.

எல்லாம் அவருக்குத் தெரியாமல் மறைந்து இருந்து எடுத்த போட்டோக்கள் தான் நம்புங்க என பதிவு செய்துள்ளார். இவருடைய பதிவை பார்த்த அஜித் ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறன் கண்டமேனிக்கு திட்டி தீர்த்து வருகின்றனர்.