Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விஜய் நடிக்கும் கோட் பட லுக் புகைப்படத்தை கலாய்த்து ப்ளூ சட்டை மாறன் போட்ட பதிவு, தொடரும் விமர்சனம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இது படத்தைத் தொடர்ந்து மேலும் ஒரு படத்தில் நடித்துவிட்டு முழு நேர அரசியல் ஈடுபட உள்ள விஜய் அரசியல் ஆதாயத்திற்காக தொடர்ந்து ரசிகர்களை சந்தித்து வருகிறார். தமிழ்நாட்டைத் தொடர்ந்து கேரளாவில் ரசிகர்களை சந்தித்தார்.

இதுகுறித்து செல்ஃபி வீடியோ ஒன்றையும் விஜய் வெளியிட்டு இருந்தார். இவரது கோட் பட லுக்கை பார்த்த ப்ளூ சட்டை மாறன் எப்படி இருந்த நான் என மூன்றே வார்த்தையில் கலாய்த்து பதிவு செய்துள்ளார்.

இவரது பதிவால் கடுப்பான விஜய் ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறனை விமர்சனம் செய்து வருகின்றனர்.