Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சிம்புவிற்கு எதிராக ப்ளூ சட்டை மாறன் போட்ட பதிவு.. கடுப்பான ரசிகர்கள்

blue sattai maaran tweet about simbu

கோலிவுட் திரை வட்டாரத்தில் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நடிகர் தான் சிம்பு. இவர் தற்போது கௌதம் வாசுதேவன் இயக்கத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றிகரமாக திரையில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் படங்களை ரிவ்யூ செய்து பிரபலமான ப்ளூ சட்டை மாறன் சிம்பு குறித்து வெளியிட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது, நடிகர் சிம்பு சமீபத்தில் எடுத்த பேட்டியில் ‘உருவ கேலி செய்வது தவறு’ என்ற கருத்தை தெரிவித்து இருந்தார். அதற்கு ப்ளூ சட்டை மாறன் அவர்கள் சிம்புவின் பழைய பாடல் வரிகள் ஒன்றை உதாரணம் காட்டி “இதுதான் பெண்களை மதிக்கும் லட்சணமா” என்று பதிலடி கொடுத்திருக்கிறார். அதனைப் பார்த்த சூடான சிம்பு ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறனின் பதிவிற்கு கண்டபடி திட்டி வறுத்தெடுத்து வருகின்றனர்.