Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

“லியோ 2 வேண்டாம்”.. லோகேஷ் கனகராஜ்க்கு பதில் அளித்த ப்ளூ சட்டை மாறன்

Blue Sattai Maran Request to Lokesh Kanagaraj

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கோட். இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வருகிறது.

இது தளபதி விஜயின் கடைசி திரைப்படமாக இருப்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் செய்தியாளர்களை சந்தித்தபோது லியோ 2 உருவாவதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் விஜய் ஓகே சொன்னால் உடனே படத்தை எடுக்கலாம் என்று தெரிவித்து இருந்த நிலையில் ப்ளூ சட்டை மாறன் இது குறித்து பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். ஐயோ விஜய் பாவம் விட்ருங்க என கெஞ்சுவது போல போஸ்ட் போட்டுள்ளார். அதாவது லியோ 2 வேண்டாம் என கூறியுள்ளார்.