இயக்குனர் எஸ்.ஜெயகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘புளூ ஸ்டார்’ (Blue Star). இப்படத்தில் நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் ஷாந்தனு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், கீர்த்தி பாண்டியன், பிரித்விராஜன், பகவதி பெருமாள் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
லெமன் லீப் கிரியேஷன் பிரைவேட் லிமிடெட் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். தமிழ் ஏ அழகன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு செல்வா ஆர்.கே. படத்தொகுப்பு மேற்கொண்டுள்ளார். இப்படத்தின் போஸ்டர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.
இந்நிலையில், ‘புளூ ஸ்டார்’ (Blue Star) திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படம் ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது.
ஜெயிக்கிறோம் 🏏💥 #Bluestar in cinemas January 25th 🫶🏻@beemji @BlueStarOffl @lemonleafcreat1 @chejai007 @AshokSelvan @prithviactor @iKeerthiPandian @dhivya_dhurai @GaneshLemonLeaf @SoundaryaGanes9 #GovindVasantha @Lovekeegam @that_Cameraman @pro_guna @thinkmusicindia… pic.twitter.com/Dr2u4skHRr
— Shanthnu (@imKBRshanthnu) January 6, 2024