Tamilstar
News Tamil News

பிரபல பாடகர் இசையமைப்பாளர் திடீர் மரணம்! திரையுலகம் சோகம்!

அண்மைகாலமாக சினிமா பிரபலங்கள் இறந்த செய்தி தொடர்ந்து வந்து கொண்டிருப்பது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் மேலும் ஒரு மரணம் நிகழ்ந்துள்ளது.

ஹிந்தி சினிமாவை சேர்ந்த பிரபல இசையமைப்பாளரும், பாடகருமான வாஜித் கான் சிறுநீரக தொற்றால் கடந்த சில நாட்களுக்கு முன்பு மும்பை செம்பூர் சூரானா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவரின் உடல் நிலை மோசமானது.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இன்று காலை அவர் காலமானதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இச்செய்தியை அவருடன் இணைந்து பணியாற்றும் இசையமைப்பாளர் சஜித் தெரிவித்துள்ளார்.

சஜித் வாஜித் இருவரும் இணைந்து 1998 ல் பியார் கியா தோ தர்ணா க்யா படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்கள்.

பல படங்களில் பணியாற்றிய இவர்கள் சல்மான் கான், அக்‌ஷய் குமார் ஆகியோருக்காக அண்மையில் பின்னணி பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.